Categories
தேசிய செய்திகள்

ஜம்மு காஷ்மீரில் 13 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளதாக அம்மாநில அரசாங்கம் தகவல்

உலகையே பீதியில் அச்சுறுத்தி வருகிறது இந்த கொரோனா வைரஸ். கொரோனா தொற்று நோய் இந்தியாவில் உள்ள 26 மாநிலங்களில் பரவியுள்ளது. வெளிநாட்டினர் உட்பட கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 650 ஆக அதிகரித்துள்ளது. மேலும் இதுவரை கொரோனாவால் சிகிச்சை பெற்று வந்த 43 பேர் குணமடைந்துள்ளனர். இந்த நிலையில், வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது. நாட்டில் மகாராஷ்டிரா மற்றும் கேரள மாநிலங்களில் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த 65 வயது முதியவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவருடன் தொடர்பில் இருந்த 4 பேருக்கு கோரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக யூனியன் பிரதேசத்தின் முதன்மை செயலாளர் ரோஹித் கன்சால் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், ஜம்மு காஷ்மீரில் இதுவரை 13 பேருக்கு கொரோனா தொற்று இருப்பதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. தொற்று உள்ளவர்களுடன் தொடர்பில் இருந்த 5482 பேர் கண்காணிப்பில் போடப்பட்டுள்ளதாக ஜம்மு காஷ்மீர் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

Categories

Tech |