Categories
உலக செய்திகள்

ஐரோப்பியாவில் மட்டும் 2, 58,068 பேர்… கொரோனாவின் பிடியில் இரு நாடுகள்!

ஐரோப்பாவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2, 50,000 ஆக  அதிகரித்துள்ளது. இதில் பாதிக்கும் மேல் இத்தாலி மற்றும் ஸ்பெயின் உள்ளது. 

சீனாவின் ஹூபே மாகாணம் வூஹான் நகரில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது 198 நாடுகளில் பரவி உலகையே கொலை நடுங்கச் செய்து வருகிறது. உலக அளவில் கொரோனா வைரசால் பலியானவர்களின் எண்ணிக்கை 22,000ஐ  தாண்டி விட்டது.  மேலும் 4,87, 434 பேருக்கு நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தநிலையில் ஐரோப்பா கண்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின்  எண்ணிக்கை தற்போது 2, 58,068 ஆக உயர்ந்துள்ளது. இதில்  14, 640 பேர் பலியாகியுள்ளனர். இத்தாலியில் மட்டும் 74, 386 பேருக்கும், ஸ்பெயினில் 56, 188 பேருக்கும் கொரோனா நோய் தொற்று இருக்கின்றன என்று தேசிய சுகாதார தரவு மற்றும் உலக சுகாதார அமைப்பின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கிறது.

 

Categories

Tech |