தமிழகத்தில் ஏப்ரல் 2ஆம் தேதி முதல் ரேஷன் அட்டைக்கு ரூ.1000 வழங்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் வேகமாக பரவி வரும் வைரஸ் 29 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டதில் காஞ்சிபுரத்தை சேர்ந்தவர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மதுரையை சேர்ந்தவர் இறந்துள்ளார். உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்தவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தமிழகத்தில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவரும் இரண்டு நாள் கழித்து வீடு திரும்ப இருக்கின்றார்.
இந்நிலையில் கொரோனா முன்னெச்சரிக்கையாக தமிழக மாநில அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.கொரோனா பாதித்தவர்களுக்கு தமிழக அரசு ரூ. 3,780 கோடி சிறப்பு நிவாரண உதவிகளை வழங்க முதல்வர் ஒதுக்கீடு செய்து ஆணை பிறப்பித்த முதல்வர் 4,000 கோடி ரூபாய் கேட்டு பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இந்நிலையில் தமிழக்கத்தில் வருகின்ற ஏப்ரல் 2ஆம் தேதி முதல் ரேஷன் கார்டுக்கு தலா ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். எப்ரல் 2ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை விநியமிக்க படும். ஏப்ரல் மாதத்திற்கான அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய், சர்க்கரை விலை இன்றி வழங்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.