மீனம் ராசி அன்பர்களே..! இன்று இருக்கும் வேலையை விட்டு வேறு ஏதேனும் வேலை செய்ய கூடுமா என்ற சிந்தனை மேலோங்கும். புதிய வாய்ப்புகள் கிடைப்பதற்காக கடுமையாக உழைப்பீர்கள். அரசாங்கத்தால் உங்களுக்கு ஓரளவு உதவிகள் கிடைக்கும். அரசு வேலைக்கான அழைப்பு கூட உங்களுக்கு வரலாம். மனைவி கருத்தரித்தல் போன்ற மகிழ்ச்சியான தகவல் இன்று உங்களை வந்து சேரும். சுகம் தனலாபம் ஓரளவு இருக்கும். தேவையற்ற பொழுது போக்குகளையும், நண்பர்களின் சகவாசத்தை தவிர்ப்பது மூலம் நல்ல பலனை இன்று நீங்கள் பெற முடியும்.
ஓரளவிற்கு சேமிப்பு உயரும். பிள்ளைகளின் விஷயத்தில் அதிக அக்கறை காட்டுவீர்கள். அக்கம்பக்கத்தார் இடம் அன்பு செலுத்துவீர்கள். அனைவரையும் அனுசரித்துச் செல்வது தான் ரொம்ப நல்லது. பழைய பாக்கிகளை நீங்கள் கேட்பதில் கொஞ்சம் சிக்கல்கள் இருக்கும். இப்போதைக்கு ஏதும் வேண்டாம். புதிய முயற்சிகளை மட்டும் தயவுசெய்து தள்ளிப்போடுங்கள் அது போதும். பெரிய முதலீடுகள் ஏதும் தொழிலில் செய்ய வேண்டாம்.
உங்களுடைய சிந்தனை திறனும் கற்பனை வளமும் இன்று பெருகும். அது மட்டுமில்லாமல் உடல் ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனமாகவே இருந்தாள், சரியான நேரத்திற்கு உணவு எடுத்துக் கொண்டு சரியான நேரத்திற்கு தூங்கச் செல்லுங்கள், பார்த்துக்கொள்ளுங்கள். வயிறு உப்புசம் போன்ற பிரச்சினைகள் கொஞ்சம் இருக்கக்கூடும். அதை சமாளிக்க வேண்டியிருக்கும் கவனத்தில் கொள்ளுங்கள்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது சிவப்பு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும். அது மட்டும் இல்லை இன்று அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள் ரொம்ப சிறப்பாகவே இருக்கும். மனமும் அமைதியாக காணப்படும்.
அதிர்ஷ்டமான திசை: வடக்கு
அதிர்ஷ்ட எண்: 6 மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் வெள்ளை நிறம்