உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரசால் 5 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனா வைரஸ் 200க்கும் மேற்பட்ட நாடுகளுக்குப் பரவி, உலகையே அச்சுறுத்தி வருகிறது. சீனாவில் தொடங்கிய இந்த வைரசால் அங்கு 81,000த்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்ட நிலையில் 3,200க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். சீனாவில் கொரோனா வைரஸ் தாக்கம் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டாலும் மற்ற நாடுகளில் இதன் அச்சுறுத்தல் அதிகரித்துள்ளது.
கொரோனா தாக்கத்தால் ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான இத்தாலி, சீனாவை விட கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அதே போல ஸ்பெயின் , அமெரிக்காவையும் விட்டுவைக்காத கொரோனா வைரஸ் உலகையே கோரத்தாண்டவம் ஆட தொடங்கியுள்ளது. உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5,00,542ஆக உயர்ந்த நிலையில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 22,334ஆக அதிகரித்துள்ளது. அதே போல கொரோனா பாதித்த 1,21,214 பேர் குணமடைந்துள்ளனர்.