கொரோனா பரிந்துரைக்கப்பட்ட மருந்தை மக்கள் பயன்படுத்த வேண்டாம் என மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
கொரோனாக்கு எதிராக மத்திய அரசு ஹைட்ராக்ஸிகுளோரோக்குயின் என்ற மருந்தை பரிந்துரை செய்தது. இந்த மருந்தானது பக்க விளைவுகளை கொண்டது என்றும், இதனை மருத்துவர்களின் ஆலோசனையின்றி எடுத்துக்கொண்டால்,
பின்விளைவுகள் ஏற்படும் என்பதால் அதனை தன்னிச்சையாக மக்கள் பயன்படுத்த வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அரசு பரிந்துரைத்ததை அடுத்து பல்வேறு நபர்கள் மருந்தகங்களுக்கு சென்று ஹைட்ராக்ஸிகுளோரோக்குயின் மருந்தை வாங்கி உள்ளதால் இந்த எச்சரிக்கையை அரசு விடுத்துள்ளது.