சிம்மம் ராசி அன்பர்களே..! இன்றைய நாள் இஷ்டத்திற்கு மாறாக எண்ணிய காரியங்கள் அனைத்துமே நடைபெறும். வழக்குகளை ஒத்திப் போடுவது ரொம்ப நல்லது. வாகன சுகம் குறையும். உயரதிகாரிகளிடம் பணிவுடன் நடந்து கொள்வது ரொம்ப நல்லது. உத்தியோகத்திலிருப்பவர்கள் சில தடங்கல்களை இன்று சந்திக்கக்கூடும். கூடுதல் உழைப்பு போன்றவை இருக்கக் கூடும். மனநிம்மதி குறையும்.
இன்று உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு தொலைபேசி வழித் தகவல்களால் சிறு தடை கொஞ்சம் ஏற்படும். எதிர்பாராத வீண் பிரச்சினைகளும் மனக்குழப்பம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் ரொம்ப கவனமாகவே இருக்க வேண்டும். பிள்ளைகளின் உடல் ஆரோக்கியத்திலும் ரொம்ப கவனமாகவே இருக்க வேண்டும். குடும்பத்திலுள்ளவர்களாலும் மருத்துவ செலவுகள் கொஞ்சம் இருக்கும், பார்த்துக் கொள்ளுங்கள். மனைவியிடம் தயவுசெய்து எந்தவித வாக்குவாதங்களும் செய்யாதீர்கள்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது சிவப்பு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லை இன்று அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்தும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும். உங்களுடைய மனமும் அமைதியாகவே இருக்கும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு
அதிர்ஷ்ட எண்: 5 மற்றும் 6
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் வெளிர் நீல நிறம்