மிதுனம் ராசி அன்பர்களே..! இன்று தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் இருக்காது. கொஞ்சம் கடினமான சூழல்தான் இருக்கும். மனதில் கவலை இருந்துக்கொண்டே இருக்கும். அதன் காரணமாக குடும்பத்திலும் நிம்மதி குறையும். இன்று புதிய ஆர்டர்கள் கிடைப்பது கொஞ்சம் தாமதம் இருக்கும். பங்குதாரர்களுடன் சின்ன சின்ன வாக்குவாதங்கள் வந்து செல்லும் பார்த்துக்கொள்ளுங்கள். பிரச்சினைகள் ஓரளவு சரியாகும்.
எதிர்பாராத வீண் விரயங்கள் தேவையற்ற செலவுகள் கொஞ்சம் இருக்கும். பண விஷியத்தில் மட்டும் பிறருக்கு வாக்கு கொடுப்பது, முன்ஜாமீன் கொடுப்பது போன்றவற்றை தவிர்க்கவும். குடும்பத்தில் ஒற்றுமை குறைய கூடிய சம்பவங்கள் நடைபெறும், பார்த்துக்கொள்ளுங்கள். கொஞ்சம் பொறுமையாக இருங்கள். வாக்குவாதத்தில் மட்டுமே ஈடுபடவேண்டாம்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் செய்யும் பொழுது சிவப்பு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லை இன்று அம்மன் வழிபாட்டை மேற்கொள்ளுங்கள், இன்று வெள்ளிக்கிழமை என்பதால் அம்மன் வழிபாடு உங்களுக்கு சிறப்பை கொடுக்கும். மனதை அமைதியாக வைத்துக் கொள்வதற்கு உதவும்.
அதிஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண்-:4 மற்றும் 6
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு மற்றும் அடர் நீல நிறம்