Categories
ஆன்மிகம் இந்து

பெண்களே உங்கள் திருமாங்கல்யத்தை மாற்றும்பொழுது கவனம் இருக்கட்டும்..!!

திருமாங்கல்யம் மாற்றும் பொழுது பெண்கள் கவனிக்க வேண்டிய மிக முக்கியமான விஷயங்கள்..!

இன்றைக்கு தாலிக்கயிறை அடிக்கடி மாற்றிக் கொண்டுதான் இருக்கின்றோம். அதிலும் முக்கியமாக மஞ்சள் கயிற்றில் அணிபவர்கள் இந்த மாங்கல்ய கயிற்றை  அடிக்கடி மாற்றிவிடுவார்கள். அப்படி மாற்றும் பொழுது நாம் கவனிக்க வேண்டிய பல விஷயங்கள் இருக்கின்றது.

 ஒரு பெண்ணிற்கு மிக முக்கியமாக கருதப்படுவது  திருமாங்கல்யம் மட்டும் தான் இருக்கமுடியும். நல்ல ஒரு முகூர்த்தத்தில் பந்தகால் எல்லாம் வைத்து ஹோமம் வளர்த்து பலவிதமான மந்திரங்கள் சொல்லி பெரியோர்களின் ஆசியோடும் அந்த இறைவனின் ஆசியோடு ஒரு பெண்ணின் கழுத்தில் கட்டப்படுவது தான் தாலி என்று கூறுவார்கள் . அப்படி இருக்கும் அந்த தாலிக்கொடியை நாம் எவ்வளவு முக்கியமாக பாதுகாக்க வேண்டும் என்பதை ஒரு விளக்கமாக பார்ப்போம்.

எப்பொழுது மாற்றலாம்.? எந்த கிழமையில் மாற்றுவது.? எங்கு வைத்து மாற்றுவது இப்படி பல சந்தேகங்களை உங்கள் அனைவருக்கும் இருக்கும் அதற்கான பதிலை பற்றியும் இப்பொழுது தெரிந்துகொள்வோம்.

தாலிக்கயிற்றை நாம் அடிக்கடி மாற்றக்கூடாது. கயிறு பழுதாகி மந்த நிலை வந்தால் மட்டுமே அதை மாற்ற வேண்டும். அதாவது வருடத்திற்கு இரண்டு முறை அல்லது மூன்று முறை மாற்றலாம். பொதுவாக தாலிக்கயிற்றை நாம் வருடத்திற்கு இரண்டு முறை மாற்றுவது தான் சிறந்தது. இவ்வளவு மதிப்பு மிக்க இந்த தாலிக்கயிற்றை திங்கள், செவ்வாய், வியாழக் கிழமைகளில் மட்டும் தான் மாற்ற வேண்டும்.

சிலர் வெள்ளிக்கிழமைகளில் மாற்றலாம் என்று சொன்னால் மாற்றக்கூடாது.  வெள்ளிக்கிழமைகளில் கட்டுவதும் சரி, மாற்றுவதும் சரி அவ்வளவு ஒரு மங்களகரமான விஷயமாக இருக்காது என்பதற்கான வாய்ப்புகள் அதிகம். மாங்கல்யத்தை  மாற்றும் பொழுது மற்றவர்கள் யாருமே பார்க்க கூடாது. இவ்வெட்டு இருக்கும் சூழ்நிலையில்  மற்றவரின் துணை இல்லாமல் தான் நாம் திருமாங்கல்யக் கயிறு மாற்ற வேண்டும்.

பெற்ற தாய் கூட பார்க்க கூடாது என்று தான் கூறுவார்கள். அது தான் உண்மையான பழக்கவழக்கம்.  பழக்கம் இல்லாதவர்கள் புதிதாக மாங்கல்யம் மாற்றுகிறோம் தெரியவில்லை என்றால் நிச்சயமாக நம் அம்மாவின் துணையை நாடுவது கண்டிப்பாக தேவைப்படக் கூடிய ஒரு விஷயம் தான். இருந்தாலும் காலப்போக்கில் அதை நாம் மாற்றிக் கொண்டு நாம் நமக்கு நாமே மாற்றிக் கொள்வதுதான் சிறந்த ஒன்று.

கர்ப்பமாக இருக்கும் எந்த ஒரு பெண்ணும் அவர்கள் தாலிக்கயிற்றையோ அல்லது தங்கத்தால் உள்ள தாலி சரடை மாற்றவே கூடாது. அந்த காலத்தில் பெண்கள் மஞ்சள் கயிற்றில் தாலியை அணிவதை வழக்கமாக வைத்துக் கொண்டிருந்தார்கள். பெண்கள் தினமும் அந்த தாலி கயிற்றில் மஞ்சள் தேய்த்து குளிப்பார்கள். இன்னும் இது  பழக்கத்தில் இருக்கின்றது. திருமணமான சில மாதங்களில் கர்ப்பம் தரித்தவுடன் அந்த மஞ்சள் பூசிய தாலிக்கயிறு அந்தத் தாய்க்கும் சேய்க்கும் சிறந்த பாதுகாப்பாகவும், கிருமிநாசினியாகவும் தான் இருந்துகொண்டிருக்கிறது.

கழுத்தில் இருக்கும் மஞ்சல் கயிறு பெண்களின் மார்பகத்தில் எந்த ஒரு நோயும் அண்டவிடாமல் தடுக்கும். ஆனால் இன்று காலம் சற்று அதனை மாற்றி விட்டது. அன்று போல் பெண்களின் மஞ்சள் தேய்த்து மஞ்சள் தாலி கயிறு என்று கிடையாது. பலருக்கும் மார்பகம் சார்ந்த பல நோய்கள் பாதிக்கப்படுவதற்கு இதுவும் ஒரு முக்கிய காரணமாகும்.  இது அறிவியல் சார்ந்த ஒரு உண்மையாகத்தான் இன்றளவும் கருதப்படுகின்றது.

தாலியை மஞ்சள் கயிற்றில்  அணியலாமா அல்லது தங்க சரடில் அணியலாமா என்று கேட்டால் அறிவியல் சார்பாக நாம் பார்த்தால்  மஞ்சள் கயிற்றில் அணிவதுதான் சிறந்தது. மற்றபடி உங்கள் வீட்டின் வழக்கப்படி உங்கள் விருப்பப்படி எது சரி என்று படுகிறதோ அதையே நாம் செய்துகொள்ளலாம். அனைவரும் பொதுவாக இந்த தாலிக்கயிற்றை ஆடி பதினெட்டாம் பெருக்கு அன்று மாற்றிக் கொள்வார்கள்.

ஆடிப்பெருக்கு எந்த ஒரு நாள், நட்சத்திரம், கிழமைகளையும் பார்க்க வேண்டாம். அது வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை, திங்கள்கிழமை, அஷ்டமி, நவமி இதுபோன்ற எந்த நாட்களிலும் ஆடி18  என்று ஒரு விசேஷம் வருகிறதோ, அன்றைக்கு மாற்றிக் கொள்வது எந்த தவறும் கிடையாது.

திருமாங்கல்ய கயிறு  16 திரிகளை கொண்டதாக தான் இருக்கவேண்டும். இதை பிரம்மமுகூர்த்தமான அதிகாலை பொழுதில் மாற்றுவது சிறந்த ஒன்று. பெண்கள் காலையில் எழுந்து குளித்து விட்டு, பூஜை அறையில் கிழக்கு திசை நோக்கி பூஜைகள் செய்து முடித்து அதன் பிறகு உட்கார்ந்து நம் கழுத்தில் இருக்கும் பழைய தாலியில் இருக்கும் அந்த முடிச்சுகளை மட்டுமே ஒன்றாக வைத்து கொண்டு.

மணிகளை  ஒவ்வொன்றாக கோர்த்து கழுத்தில் போட்ட பின்புதான் பழைய கயிற்றை நாம் களத்திலிருந்து களற்ற வேண்டும்.  கழட்டிய பழைய கயிற்றை நம் வீட்டிற்கு பக்கத்தில் இருக்கக்கூடிய நீர் நிலைகளில் சேர்க்க வேண்டும். இப்படி மாங்கல்ய கயிற்றில் நாம் ஒன்று சேர்த்து மணிகளை கோர்த்து கடைசியாக வரும் முடிச்சை இடது பக்கத்தில் வர, நெஞ்சு பக்கத்தில் கடைசி முடிச்சு  இருக்க வேண்டும்.

இப்படி கட்டி முடித்த பிறகு ஒரு பாத்திரத்தில் மஞ்சள் நீரை கரைத்து, அதில் நம்முடைய திருமாங்கல்ய கயிற்றை, குண்டுகள் அனைத்தையும் சேர்த்து ஏழு அல்லது ஒன்பது முறை அதை துவைத்து எடுக்க வேண்டும். அதன் பின்பு திருமாங்கல்ய கைற்றிற்கு குங்குமம் அர்ச்சனை செய்யவேண்டும். இவ்வாறு  குங்கும அர்ச்சனை செய்தால் எல்லாவிதமான தெய்வங்களையும் வணங்குவதற்கு சமம். திருமங்கலத்திற்கு நாம் குங்குமப் பொட்டு வைத்து அதன் பின்பு நாம் எப்பொழுதும் போலவே செயல்படலாம்.

முக்கியமான விஷியம்: உங்கள் மாங்கல்யத்தை மாற்றிய அன்று  மாலை வேளையில் குடும்பத்தோடு, கணவரோடு சேர்ந்து ஏதாவது ஒரு அம்மன் கோவிலுக்கு சென்று அம்பாளை வழிபட்டு வருவது மிகவும் சிறந்த செயலாகும்.

Categories

Tech |