தேவையான பொருட்கள்
பாசிப்பருப்பு – 2 கப்
கிஸ்மிஸ் பழம் – 20
ஏலக்காய் – 10
முந்திரி – 10
வெல்லம் – 2 1/2 கப்
தேங்காய் – 8 மேசைக்கரண்டி
பால் – 2 டம்ளர்
செய்முறை
- முதலில் குக்கரில் 2 கப் தண்ணீர் வைத்து பாசிப்பருப்பை வேக வைக்கவேண்டும்.
- வெல்லத்தை நன்றாக துருவி சூடான தண்ணீரில் கரைத்து வைக்கவும்.
- தேங்காய், 5 முந்திரி மற்றும் ஏலக்காய் சேர்த்து மிக்ஸியில் நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
- மீதமுள்ள ஐந்து முந்திரியையும் கிஸ்மிஸ் பழத்தையும் ஒரு கடாயில் நெய் ஊற்றி வறுத்து எடுக்கவும்.
- அகலமான பாத்திரம் ஒன்றை அடுப்பில் வைத்து வேகவைத்த பாசிப்பருப்பையும் கரைத்து வைத்துள்ள வெல்லத்தையும் சேர்த்து நன்றாக கிளறவும்.
- அதனுடன் அரைத்து வைத்துள்ள விழுதையும் சேர்த்து வறுத்த கிஸ்மிஸ் முந்திரியையும் போட்டு நன்றாக கிளறி விடவும்.
- இறுதியாக பாலை நன்றாக காய்ச்சி அதனுடன் ஊற்றி மீண்டும் கிளறி இறக்கிவிடவும்.
- சுவைமிகுந்த பாசிப்பருப்பு பாயாசம் தயார்.