இயக்குனர் பிரபல தமிழ் திரைப்பட நடிகர் சேதுராமன் இளம் வயதில் மாரடைப்பால் மரணம் அடைந்துள்ள நிலையில் அவர் கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தி கடைசியாக பேசிய வீடியோ வைரலாகி வருகிறது.
கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ படத்தின் மூலம் மிகவும் பிரபலமானவர் 36 வயதான சேதுராமன். அதை தொடர்ந்து வாலிபராஜா, சக்கபோடு போடு ராஜா மற்றும் 50/50 என இதுவரை 4 திரைப்படங்களில் நடித்திருக்கிறார். தோல் நோய் மருத்துவரான இவர் சென்னையில் தனியாக கிளினிக் ஒன்றை நடத்தி வந்த நிலையில், திடீரென மாரடைப்பால் உயிரிழந்தார்.
இவருக்கு கடந்த 2014-ஆம் ஆண்டு உமையால் என்பவருடன் திருமணம் முடிந்தது. இவர்களுக்கு ஒரு குழந்தையும் இருக்கிறது. இவரது மறைவு திரையுலகினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. திரை பிரபலங்கள் பலரும் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இவர் மரணமடைவதற்கு முன்னதாக இந்தியாவில் கொரோனா அச்சம் காரணமாக நாடு முழுவதும் 21 நாட்களுக்கு பிறகு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் அது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தி வீடியோ ஒன்றை கடைசியாக பேசியது, வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
கண்ணா லட்டு தின்ன ஆசையா திரைப்படத்தில் ஹீரோவாக நடித்த சேதுராமன் சற்று முன் மாரடைப்பால் காலமானார் pic.twitter.com/DA71wam4P6
— ஷேக்பரித் (@FareethS) March 26, 2020
அந்தவகையில், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், “அவருடைய மரண செய்தியால் நான் அதிர்ச்சியில் இருக்கிறேன். சீக்கிரமாக சென்றுவிட்டார். மிகவும் நல்ல மனிதர்” என்று குறிப்பிட்டுள்ளார்.
shocked … gone too soon .. such a nice person … RIP #sethuram @iamsethuraman pic.twitter.com/dlA8lQooAM
— aishwarya rajesh (@aishu_dil) March 26, 2020
பிரபல திரைப்பட இயக்குனர் வெங்கட்பிரபு தனது ட்விட்டர் பக்கத்தில், “36 வயதில் மாரடைப்பு என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. கடவுளே இது நியாயமல்ல” அவரது குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கல் என்று பதிவிட்டுள்ளார்.
Gone very very soon my friend!!! Just 36 years old getting a cardiac arrest :(((( It’s not at all fair god!! Not at all Fair!! My deepest condolences to the family! #missUsethu #rip pic.twitter.com/SuRf1RYUVh
— venkat prabhu (@vp_offl) March 26, 2020
அண்ணன் சந்தானம் அவர்களின் நெருங்கிய நண்பரும் கண்ணா லட்டு திண்ண ஆசையா படத்தின் கதாநாயகனுமான மருத்துவர் சேதுராமன் அவர்கள் மாரடைப்பால் காலமானார் 😂😂😂 @KumaravelKuppu3 @iamsanthanam pic.twitter.com/moVLlxSAjL
— AXN உதய கிருஷ்ணகிரி (@AxnUdhayakumar) March 27, 2020