Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் கொரோனா : பலி எண்ணிக்கை 17… பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 724!

இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 724 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

உலகையே அச்சுறுத்தி வரும் கொரானா வைரஸ் உலக நாடுகளில் மரணத்தை ஏற்படுத்தி  கதிகலங்க வைத்து வருகிறது. கடந்த சில வாரங்களாக இந்தியாவிலும் வேகமாக பரவி வரும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் பலியானோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து கொண்டு வருகிறது.

இந்த நிலையில் இந்தியாவில் கொரோனா வைரசால் பலியானோர் எண்ணிக்கை 16 லிருந்து 17 ஆக உயர்ந்துள்ளது. மேலும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 724 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக கேரளாவில் 137 பேரும், மகாராஷ்டிராவில் 131 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர் . மேலும் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 43ல் இருந்து 67 ஆக அதிகரித்துள்ளது.

Categories

Tech |