கொரோனா வைரஸ் தாக்கத்தின் எதிரொலியாக ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த் தாஸ் பால்வேறு சலுகைகளை அறிவித்தார்.
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், வருகின்ற ஏப்ரல் 14ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. 700க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 17 பேர் உயிரிழந்துள்ளனர்.இந்நிலையில் மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளையும், உத்தரவுகளையும் , சலுகைகளையும் அறிவித்து வருகின்றது.
இதன் ஒரு பகுதியாக செய்தியாளர்களை சந்தித்த ரிசர்வ் வங்கி ஆளுநர், சக்திகாந்த் தாஸ் செய்தியாளர்களை சந்தித்தார்.கொரோனா வைரஸால் ஏற்படும் பொருளாதார இழப்பை ரிசர்வ் வங்கி உன்னிப்பாக கவனித்து வருகின்றது.ஜிடிபி வளர்ச்சி விகிதம் நிசசயம் குறையும். ரிசர்வ் வங்கி, வங்கிகளிடம் வாங்கிய தொகைக்கு கொடுக்கும் வட்டியும் 0.90 சதவிதம் குறைக்கப்பட்டுள்ளது. ரெப்போ வட்டி விகிதம் குறைப்பால் வாடிக்கையாளர்களின் EMI குறைய வாய்ப்பு.
ரெப்போ வட்டி விகிதம் குறைப்பால் தொழில் நிறுவனங்கள், பொது மக்களுக்கு குறைந்த வட்டியில், வங்கிகள் கடன் வழங்க வாய்ப்பு கிடைக்கும். ரெப்போ வட்டி விகிதம் குறைக்கப்பட்டதால் ஏற்கனவே வங்கிகளால் வழங்கப்பட்ட கடன் வட்டியும் குறைய வாய்ப்பு. வங்கிகள் ரிசர்வ் வங்கியிடம் கண்டிப்பாக கொடுத்து வைக்க வேண்டிய பணம் என்பது CRR என்று அறியப்படும். தற்போது, இது குறைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வங்கிகளின் கைகளுக்கு, கடன் கொடுக்க பணம் கிடைக்கும்.
பணவீக்க விகிதம் கட்டுக்குள் இருப்பதை ரிசர்வ் வங்கி உறுதிப்படுத்தும். கடன் வசூலை நிறுத்திவைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மாத தவணைகளை 3 மாதங்களுக்கு கட்ட தேவையில்லை. மாத தவணை செலுத்தவில்லை என்பதற்காக, திவால் நடவடிக்கை எடுக்க கூடாது; சிபிலில் கடன் செலுத்தவில்லை என்று பதிவு செய்ய கூடாது என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த் தாஸ் தெரிவித்தார்.