Categories
மாநில செய்திகள்

கொரோனா தடுப்பு நடவடிக்கை… தமிழகத்தில் காய்கறிகள் சந்தையாக மாறும் பேருந்து நிலையங்கள்!

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை மத்திய அரசு பிறப்பித்துள்ளது. தமிழகத்திலும் ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கபட்டுள்ளதாக முதல்வர் பழனிசாமி நேற்று அறிவித்தார். இதனால் அத்தியாவசிய தேவைகள் தவிர மற்ற எதற்கும் வெளியே வர வேண்டாம் என கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ராமநாதபுரத்தில் அரண்மனை, சாலை தெருவில் செயல்பட்ட சந்தைகள் தற்காலிகமாக இட மாற்றம் செய்யபட்டுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மக்கள் அதிகம் கூடுவதை தடுக்க சந்தைகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளன. இதனால் மாற்று ஏற்பாடாக ராஜா மேல்நிலைப்பள்ளி, புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள திடலில் சந்தைகள் அமைக்கப்பட்டுள்ளது.

இதேபோல தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் மற்றும் தற்காலிக பேருந்து நிலையம் ஆகிய இடங்களில்
காய்கறிகள் விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 3 அடி இடைவெளியுடன் கூடிய கட்டங்கள் போடப்பட்டு காய்கறி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. காய்கறிகள் வாங்க வரும் பொதுமக்கள் இடைவெளி விட்டு நின்று வாங்கி விட்டு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Categories

Tech |