Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

குழந்தைகள் காய்கறி சாப்பிட மாட்டிக்காங்களா….? அப்ப இத கொடுங்க….!!

காய்கறியை வெறுக்கும் குழந்தைகளுக்கு என்னென்ன உணவுகள் அளிக்கலாம் என்பது  குறித்து இந்த செய்தி குறிப்பில் காணலாம். 

கொரோனா பயத்தால் நாடே நடுங்கி போய் இருக்கிறது. அதை தடுப்பதற்காக மத்திய அரசு ஏப்ரல் 14ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது. இதை ஏற்று பொதுமக்களும் தங்களது வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றனர். 21 நாள்கள் வேலைக்கும் செல்லாமல் வீட்டிலேயே முடங்கி இருப்பதால் வருமானம் பாதிக்கப்பட்டு பிடித்த உணவை வாங்கி சமைத்து சாப்பிட முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. பாஸ்ட் புட் கடைகள் முற்றிலும் மூடப்பட்டுள்ளது.

இன்றைய கால கட்டத்தில் உள்ள குழந்தைகள் பாஸ்ட்புட் உணவையே அதிகம் விரும்புவர். ஆனால் 21 நாள்கள் உயிர் வாழ்வதே பெரிது என நினைத்து நமது வீட்டில் காய்கறி உணவை மட்டுமே நாம் எடுத்துக் கொண்டு வருகிறோம். இது பெரியவர்கள் விரும்பி உண்பார்கள் என்றால், வீட்டில் உள்ள குழந்தைகள் காய்கறிகளை வெறுக்கத்தான்  செய்வார்கள். அதிலும்,

ஒருசில குழந்தைகள் எவ்வளவுதான் கட்டாயப்படுத்தினாலும் காய்கறிகளை தொடவே தொடாது. அத்தகைய குழந்தைகளுக்கு சத்து மாவை நாம் கொடுக்கலாம். ஏனெனில் நாம் உண்ணும் அனைத்து காய்கறிகளிலும் உள்ள சத்துக்கள், வைட்டமின்கள் எல்லாம் சத்துமாவில் கிடைக்கும். இதுவே குழந்தைகளுக்கு தேவையான எனர்ஜியை வழங்கிவிடும். அதேபோல் வாழைப்பழத்தை வாழவைக்கும் பழம் என்று நமது முன்னோர்கள் கூறுவர். நாள்தோறும் சாப்பிடும் உணவுடன் ஒரு வாழைப்பழத்தை குழந்தைகளுக்கு கொடுத்தால் அதுவும் மிக நல்லது.

Categories

Tech |