Categories
மாநில செய்திகள்

கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து அதிகாரிகளுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை!

கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனை கூட்டத்தில் சுகாதார துறை அமைச்சர், தலைமைச் செயலாளர், காவல்துறை தலைவர் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

தமிழகத்தில் 144 தடை ஏப்., 14ம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ள நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர். முன்னதாக தமிழக முதலமைச்சருடன், பிரதமர் மோடி தொலைபேசியில் பேசியுள்ளார்.

தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கை பற்றி முதல்வர் பழனிசாமியிடம் பிரதமர் மோடி கேட்டறிந்தார் என தகவல் வெளியானது. 144 தடை உத்தரவு எவ்வாறு செயல்படுத்தப்பட்டு வரப்படுகிறது, மாநில நிதி நிலவரம் மற்றும் சட்டம், ஒழுங்கு குறித்தும் முதல்வர் விளக்கம் அளித்துள்ளார். இதனை தொடர்ந்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

Categories

Tech |