Categories
தேசிய செய்திகள்

ஆஹா சரக்கு….. கை கழுவும் சுத்திகரிப்பானை குடித்து….. கைதி மரணம்….!!

கேரளாவில் சிறைக்கைதி ஒருவர் மது என நினைத்து கைகழுவும் சுத்திகரிப்பானை அருந்தியதில் பரிதாபமாக உயிரிழந்தார்.

கேரள மாநிலம் பாலக்காட்டில் உள்ள சிறை ஒன்றில் பாதுகாப்பை கருத்தில் கொண்டு முக கவசம், கை கழுவுவதற்கு பயன்படும் சனிடைசர் உள்ளிட்டவற்றை கைதிகளை வைத்து சிறை அதிகாரிகள் தயாரித்து வருகின்றனர். இந்நிலையில் கைகழுவும் சுத்திகரிப்பான்-இல் ஆல்கஹால் வாசனை வருவதை உணர்ந்து விட்டு மது என நினைத்து ராமன் குட்டி என்ற கைதி கைகழுவும் சுத்திகரிப்பான் அருந்தி பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து சிறைத்துறை அதிகாரி தெரிவித்ததாவது, ஆல்கஹால் வாசனையை வைத்து மது  என நினைத்து அருந்தியதால் தான் கைதி உயிரிழந்தார். அதில், ஐசோபுரோபில் ஆல்கஹால் உள்ளது . தற்போது இறந்தவரின் உடல் பிரேத பரிசோதனைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது என்று தெரிவித்தனர்.

Categories

Tech |