அமெரிக்காவுக்கே இந்த நிலைமை என்றால் நம் நிலைமை என்ன என்று பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.
தற்போது உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் ஒரு நோய் தாக்குதல் என்றால் கொரோனா தான். உலக நாடுகளில் இதுவரை 24 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உயிர்களை இந்த நோய் பலி வாங்கியுள்ளது . ஆரம்பத்தில் சீனாவில் தொடங்கிய இந்த வைரஸ் உலகம் முழுவதும் படிப்படியாக பரவியது. இதுவரையில் சீனாவில் மட்டும் தான் இதனுடைய தாக்கம் அதிகமாக இருந்தது. சுமார் 81 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த நோயால் பாதிக்கப்பட்டனர்.
ஆனால் இப்போது அமெரிக்கா சீனாவை மிஞ்சியுள்ளது. அமெரிக்காவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 82,000க்கும் மேல் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இதுகுறித்து பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் ராமதாஸ் கருத்து தெரிவித்துள்ளார். அதில்,
சர்வ வல்லமை கொண்ட வல்லரசு நாடான அமெரிக்காவுக்கே இந்த நிலைமை என்றால் நம்முடைய நிலைமையை நினைத்து கூட பார்க்க முடியவில்லை. என்ன நடக்கும் என்று கருத முடியவில்லை. ஆகவே பொதுமக்கள் ஆபத்தை உணர்ந்து தங்களது வீடுகளுக்குள்ளேயே அமைதியாக 21 நாட்கள் காத்திருக்குமாறு அவர் வலியுறுத்தியுள்ளார்.