புதுக்கோட்டையில் கொரோனா அச்சம் காரணமாக தனிமைப்படுத்தப்பட்ட நபர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தின் புதுக்கோட்டைப் பகுதியில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர் தனது வீட்டாருடன் தனிமையில் கண்காணிக்கப்பட்டு வந்தார். இந்நிலையில் தன்னால் மற்றவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சத்தில் தனிமையை சகிக்க முடியாத காரணத்தினால் விரக்தியடைந்த அவர் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த செய்தி தமிழக அரசு மக்களிடையேயும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா பாதிப்பால் ஒரு உயிர் கூட வீணாக போக கூடாது என்பதே தமிழக அரசின் எண்ணம் என பேரவையில் முதல்வர் பழனிசாமி பேசி இருக்க, இது போன்று ஒரு சிலர் எடுக்கும் அவசர முடிவுகள் வேதனை அளிக்கிறது. பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உதவ தமிழக அரசு தயாராக இருக்கிறது. இது போன்ற முட்டாள்தனமான காரியங்களில் இனி யாரும் ஈடுபடவேண்டாம். மேலும் கொரோனாவால் பாதிக்கப் பட்டவர்களுக்கும், அறிகுறி தென்படும் நபர்களுக்கும் தமிழக அரசு சார்பில் கவுன்சிலிங் அளிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.