Categories
தேசிய செய்திகள்

ரிசர்வ் வங்கியின் அறிவிப்பு நடுத்தர மக்கள், தொழில் நிறுவனங்களுக்கு உதவும்… பிரதமர் மோடி பாராட்டு!

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், வருகின்ற ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. 700க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 17 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள், சலுகைகளையும் அறிவித்து வருகின்றது.

நேற்று பல்வேறு முக்கிய அறிவிப்புகளை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த ரிசர்வ் வங்கி ஆளுநர், சர்வதேச அளவில் பொருளாதாரம் பெரும் வீழ்ச்சியை சந்தித்து உள்ளது. இதனால் ரிவர்ஸ் ரெப்ரோ 4.9 லிருந்து 4 ஆக குறைக்கப்படும்.  அதே போல ரெப்போ விகிதம் 5.5 சதவிகிதத்திலிருந்து 4.4% ஆக குறைப்பு என்று அறிவித்தார்.

மேலும் 3 மாதங்களுக்கு EMI கட்ட வேண்டாம் என்பன உள்ளிட்ட முக்கிய அறிவிப்புகளை வெளியிட்ட நிலையில் இதற்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். ரிசர்வ் வங்கியின் அறிவிப்பு நடுத்தர மக்கள், தொழில் நிறுவனங்களுக்கு உதவும் என அவரது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள பிரதமர் மோடி, இந்திய பொருளாதாரத்தை பாதுகாக்க மாபெரும் நடவடிக்கை எடுத்துள்ள ரிசர்வ் வங்கிக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.

Categories

Tech |