Categories
தேசிய செய்திகள்

ரிசர்வ் வங்கியின் முடிவை நான் வரவேற்கிறேன்….. ப.சிதம்பரம் ட்வீட்!

ரெப்போ வட்டி வீதத்தைக் குறைப்பதற்கான ரிசர்வ் வங்கியின் முடிவையும், அதிக பணப்புழக்கத்தை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளையும் நான் வரவேற்கிறேன். எனினும் இ.எம்.ஐ தேதிகளை ஒத்திவைப்பது குறித்த ரிசர்வ் வங்கியின் அறிவிப்பு தெளிவற்ற நிலையில் உள்ளது.

அனைத்து இ.எம்.ஐ.களையும் செலுத்த வேண்டிய தேதிகளும் ஒத்திவைக்கப்பட வேண்டும் என்பதே கோரிக்கை என குறிப்பிட்டுள்ளார். மேலும் மத்திய அரசின் அறிவிப்புகள் சில நான் முன்வைத்த திட்டங்களை பிரதிபலிக்கின்றன. வரிக்கெடு, வங்கி தவணைகளை ஒத்தி வைப்பது, ஜிஎஸ்டி வரியை குறைப்பது பற்றி எதுவும் சொல்லவில்லை என தெரிவித்துள்ளார்.

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், வருகின்ற ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. 700க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 17 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த ரிசர்வ் வங்கி ஆளுநர், சர்வதேச அளவில் பொருளாதாரம் பெரும் வீழ்ச்சியை சந்தித்து உள்ளது. இதனால் ரிவர்ஸ் ரெப்ரோ 4.9 லிருந்து 4 ஆக குறைக்கப்படும். அதே போல ரெப்போ விகிதம் 5.5 சதவிகிதத்திலிருந்து 4.4% ஆக குறைப்பு என்று அறிவித்தார். மேலும் 3 மாதங்களுக்கு EMI கட்ட வேண்டாம் என்பன உள்ளிட்ட முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |