உத்தரகண்ட் மாநிலத்தில் மணமகன் மற்றும் முஸ்லீம் மதகுரு உட்பட 8 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்தியாவில் கொரோனா பாதிப்பு காரணமாக 144 தடை உத்தரவு 3 வது நாளாக நடைமுறைபடுத்தப்பட்டு வருகிறது. இதன் காரணமாக இந்தியா முழுவதும் ஆள்நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது. ஐடி ஊழியர்கள் அனைவரையும் வீட்டிலேயே வேலை பார்க்கும்படி அறிவுறுத்தப்பட்டிருந்தது. சிறு குறு தொழில் நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. காய்கறி, மருந்து, மளிகை பொருட்கள் விற்கும் கடைகளை தவிர்த்து மற்ற அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன. 144 தடை அறிவிக்கப்பட்ட போது, பல்வேறு கட்டுப்பாடுகளை மத்திய, மாநில அரசாங்கம் விதித்திருந்தது. அந்த வகையில், திருமணம் நிகழ்ச்சிகள் நடைபெறும் போது கூட நெரிசலை தவிர்ப்பதற்காக 150 பேர் மட்டும் இருக்க வேண்டும் என அறிவுறுத்தியிருந்தது.
மேலும் புதிதாக ஏதேனும் திருமணம் நிச்சயிக்கப்பட்டால், அதனை நடத்த முறையாக அனுமதி பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், உத்தரகண்ட் மாநிலத்தில் முறையான அனுமதி பெறாமல் திருமணம் நடத்த முயன்றதால் மணமகன் மற்றும் மதகுரு உள்ளிட்ட 8 பேரை போலீசார் கைது செய்து காவல்நிலையத்தில் வைத்துள்ளனர். இது தொடர்பாக காவல்துறை அதிகாரிகள் கூறியதாவது, ” திருமணம் நடக்கவிருந்த பகுதியில் 8 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். இந்த நிலையில், முறையான அனுமதி பெறாமல் அப்பகுதியில் திருமணத்தை நடத்த முயன்றதால் கைது செய்தோம் எனக் கூறியுள்ளனர். பணமாலையுடன் திருமண கோலத்தில் மணமகன் காவல்நிலையத்தில் அமர்ந்திருப்பது சோகமான விஷயம் தான்”.