தனிமைப் படுத்துதல் என்பது சிறைவாசம் அல்ல என்று உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏபி சாஹி தெரிவித்தார்.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஏப்ரல் 14ஆம் தேதி வரைஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மக்கள் தேவதையில்லாமல் கூட்டமாக கூட கூடாது. அத்தியாவசிய தேவைக்காக மட்டும் வெளியே வரவேண்டும் என்ற அறிவுறுத்தல் இருந்தும் மாநிலம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் வெளியே வந்தனர்.
தேவையில்லாமல் வாகனங்களை சுற்றுவதனால் கொரோனா பரவும் என்ற அச்சத்தால் போலீசார் அவர்களை கண்டித்து நடவடிக்கை அனுப்பினர். சில இடங்களில் தோப்புகரணம், சாலையில் உட்காரவைத்தல் போன்ற நடவடிக்கையை போலீஸ் மேற்கொண்டு வந்த நிலையில் காவல்துறையில் நடவடிக்கைகளை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏபி சாஹி, முன்பு இன்று விசாரணைக்கு வந்தபோது, கொரோனா தடுப்புகள் நடவடிக்கையாக தனிமைப் படுத்துவது என்பது சிறைவாசம் அல்ல. தனிமைப் படுத்துதல் என்பது கொரோனாவில் இருந்து விடுதலை பெறுவதற்கான நடவடிக்கை. கொரோனாவில் இருந்து மீண்டுவர உறுதி ஏற்போம். கனவில் கூட காண முடியாத சவாலான நிலைமையை தைரியமாக எதிர்கொள்ள வேண்டும்.
சமூக இடைவெளியை போதிப்பதோடு இருந்து விடாமல் அனைவருக்கும் உண்மையாக கடைபிடிக்க வேண்டும். சமூக இடைவெளியை கடைப் பிடிப்பது கடினமாக இருந்தாலும், மற்றவர்களின் நலனுக்காக அதை கடைபிடிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தெரிவித்தார்.