Categories
சென்னை மாநில செய்திகள்

144….. 12 மணி நேரத்தில்….. 250 வாகனங்கள் பறிமுதல்….!!

சென்னையில் மட்டும் 144 தடையை மீறி வெளியே சுற்றிய 250 பேரின் வாகனங்களை பறிமுதல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

144 தடை உத்தரவு வைரஸில் தடுப்பதற்காக 144 தடை உத்தரவு நாடுமுழுவதும் பிறப்பிக்கப்பட்ட உள்ள நிலையில் பொதுமக்கள் தங்களது வீட்டை விட்டு வெளியேறாமல் உள்ளேயே முடங்கி இருக்கின்றனர்.  ஒரு சிலரோ அரசின் அறிவுரையை மதிக்காமல் வெளியே சுற்றித் திரிந்து வருகின்றனர். அவர்களுக்கும் அவ்வப்போது நூதன முறையில் தண்டனைகள் வழங்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில், சென்னையில் நேற்றைய தினம் மட்டும் சுமார் 1500க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில், 600 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்நிலையில் நேற்று மாலை 6 மணி முதல் 12 மணி வரை கணக்கிடுகையில் சென்னையின் முக்கிய இடங்களான திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், ஆவடி, கோயம்பேடு உள்ளிட்ட காவல் நிலையத்தில் மொத்தம் 260 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அதில் 250 பேரின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. தொடர்ந்து பாதுகாப்பு நடவடிக்கைகளை காவல்துறை அரசோடு இணைந்து தொடர்ந்து பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் இந்த சூழ்நிலையில் 144 தடை உத்தரவை மீறும் மக்களின் எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே இருப்பது வேதனை அளிக்கிறது.

Categories

Tech |