Categories
உலக செய்திகள்

BIG BREAKING : பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு கொரோனா தொற்று உறுதி!

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன்  தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள காணொளியில், கடந்த 24 மணி நேரமாக தனக்கு மிக மெல்லிய அளவில் கொரோனா அறிகுறிகள்  தென்பட்டதாகவும் , சோதனை செய்ததில் கொரோனா உறுதியானதால் அமைச்சர்களுடன் தொடர்பு இல்லாமல் தனித்து இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

வீடியோ காணொளி மூலம் அரசை தொடர்ந்து நடத்தப் போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 55 வயதான போரிஸ் ஜான்சனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை போல பிரிட்டனின் பட்டத்து இளவரசர் சார்லஸ்க்கும் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |