Categories
தேசிய செய்திகள்

கர்நாடகாவில் 10 மாத குழந்தைக்கு கொரோனா தொற்று உறுதி: அதிர்ச்சியில் பெற்றோர்!

கர்நாடக மாநிலத்தில் 10 மாத குழந்தைக்கு கொரோனா நோய் தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தட்சிணா கன்னட மாவட்டத்தில் உள்ள சஜீபநாடு எனும் பகுதியில் குழந்தைக்கு தொற்று நோய் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. நாட்டில் கொரோனா தொற்று நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 724 இருந்து வந்த நிலையில், இன்று ஒரு நாள் மட்டும் 7 பேருக்கு தோற்று நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதில் இந்தியர்கள் 677 பேரும், வெளிநாட்டவர் 47 பேரும் அடங்குவர். இதுவரை இந்தியாவில் குணமடைத்தவர்கள் எண்ணிக்கை 67 ஆக உள்ளது. மேலும், உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது

இந்த நிலையில் கர்நாடகாவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை 62 ஆக அதிகரித்துள்ளது. கர்நாடகாவில் கொரோனா பாதிப்பால் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.மேலும் 4 பேர் சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதையடுத்து, 10 மாத குழந்தைக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது அனைவரையும் அதிர்ச்சி அடையச்செய்துள்ளது. கர்நாடகாவின் தெற்கு கன்னட துணை ஆணையர் சிந்து பி ரூபேஷ் கூறியதாவது, குழந்தை வெளிநாட்டிற்கு சென்று வரவில்லை என்றும், குழந்தையின் குடும்பத்தினர் கேரளா சென்று வந்ததாகவும் தெரிவித்துள்ளார். இதையடுத்து உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அந்த குழந்தை கடந்த 23ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், தற்போது குழந்தைக்கு கொரோனா அறிகுறி இருப்பதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Categories

Tech |