சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரஸ் இந்தியாவையும் விட்டுவைக்கவில்லை. இதன் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து கொண்டு வருவதால் மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இதனிடையே நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு வரும் 14ஆம் தேதிவரை (21 நாள்) பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும் அத்தியாவசிய தேவையின்றி யாரும் வீட்டை விட்டு வெளியே வர கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் நாட்டு மக்கள் வீடுகளுக்குளேயே முடங்கி கிடப்பதால் போர் அடிப்பதாக தெரிவித்தனர். ஆகவே இதன் காரணமாக ராமாயணம் ஒளிபரப்ப வேண்டும் என மக்கள் கேட்டுக்கொண்டனர்.
இந்நிலையில் மக்களின் வேண்டுகோளுக்கிணங்க நாளை முதல் டிடியில் (தூர்தர்ஷன்) ராமாயணம் ஒளிப்பரப்பப்படும் என்று மத்திய ஒளிப்பரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.