Categories
உலக செய்திகள்

பிரதமரை தொடர்ந்து சுகாதாரத்துறை அமைச்சருக்கும் கொரோனா – அதிர்ந்து போன பிரிட்டன்

பிரிட்டன் பிரதமரை தொடர்ந்து சுகாதாரத்துறை அமைச்சர் மேட் ஹேன்ஹாக்கிக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் தாக்கம் 190க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி உலகையே அச்சுறுத்தி வருகின்றது. இதற்கான மருத்து கண்டுபிடிக்க உலக நாடுகள் முயன்று வரும் நிலையில் கொரோனா வைரஸ் ஆயிரக்கணக்கான உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகின்றது. பிரிட்டன் நாட்டில் வேகமாக பரவி வரும் கொரோனா அந்த நாட்டின் பட்டத்து இளவரசரையும் விட்டு வைக்கவில்லை. அந்நாட்டின் பட்டத்து இளவரசர் சார்லஸ்க்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருந்தது.

இந்நிலையில் இன்று பிரிட்டன் நாட்டின் பிரதமர் போரிஸ் ஜான்சன்  தனது ட்விட்டர் பக்கத்தில் தமக்கு கொரோனா தொற்று இருப்பதாக தெரிவித்திருந்தார். நாட்டின் பிரதமருக்கே கொரோனாவா என்று உலக நாடுகளின் தலைவர்கள் பீதியில் இருந்த நிலையில் பிரிட்டன்‌ நாட்டின் சுகாதா‌‌ரத் துறை அமைச்சர் மேட் ஹேன்ஹாக்கிற்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு பணிகளை செய்து வருவதாக மேட் ஹேன்ஹாக் ட்விட் செய்துள்ளார்.

 

Categories

Tech |