நண்பருடன் சேர்ந்து கொரோனா வைரசை கேலி செய்த பெண்ணுக்கு வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் நாஷ்வில்லியைச் சேர்ந்த 21 வயதான அயர்லாந்து டேட் (Ireland Tate) என்ற இளம் பெண், உலகம் முழுவதும் தீவிரமடைந்து வருகிறது கொரோனா வைரஸ் குறித்து கேலி செய்து வீடியோ வெளியிட்டதோடு, தனது நண்பர்கள் 20 பேருடன் ஜாலியாக ஊர் சுற்றிக் கொண்டிருந்தார்.
அந்த வீடியோவில், அரசு கூறும் 3 மீட்டர் இடைவெளி விதியை நான் பின்தொடர மாட்டேன் என பேசியிருந்தார். அந்த வீடியோ வெளியான சில நாட்களிலேயே அந்த பெண்ணுக்கு சுவாசப் பிரச்சனைகள் மார்பில் ஒரு இறுக்கம் மற்றும் அதிக நேரம் இருமிக் கொண்டே இருந்ததால் வாயில் இருந்து இரத்தம் வருதல் போன்ற அறிகுறிகள் தென்பட்டன.
இதையடுத்து மருத்துவமனைக்கு சென்ற அந்த பெண்ணுக்கு சோதனை செய்தபோது தான் கொரோனா வைரஸ் இருப்பது தெரியவந்தது. இந்த நிலையில் டேட் தனது பெற்றோருடன் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் இருப்பதாக சொல்லப்படுகிறது.
அதைத் தொடர்ந்து, அவர் அரசாங்கத்தின் நடவடிக்கைகளை கேலி செய்வது போன்ற வீடியோ வெளியிட்டதை திரும்பப் பெற்றதாக கூறினார். மேலும் மற்றவர்களை கவனமுடன் இருக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.