Categories
அரசியல்

மதியம் 2 30 மணி வரையே பெட்ரோல் டீசல் கிடைக்கும் ..!!

கொரோனா ஊரடங்கை பலரும் மீறி வருவதால் தமிழக அரசு பல்வேறு நேரக்கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக ஏப்ரல் 14ஆம் தேதி முதல் நாடு முழுவதும் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் பல்வேறு மாநிலத்தில் பொதுமக்கள் ஊரடங்கு உத்தரவுகளை மீறுவதாகவும், வெளியே தேவையில்லாமல் சுற்றி வருவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்து வந்தன.

இதே நிலைதான் தமிழகத்திலும் நீடித்தது.ஆங்காங்கே போலீசார் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுத்தாலும் இந்த நிலை நீடித்து  வந்த நிலையில் தேவையில்லாமல் மக்கள் கூடுவதை தவிர்ப்பதற்காக பல்வேறு நேரக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

தமிழகம் முழுவதும் அத்தியாவசிய கடைகள் முழு நேரமும் செயல்படலாம் என அறிவித்திருந்த நிலையில் தற்போது காலை 6 மணி முதல் மதியம் 2.30 மணி வரை மட்டுமே திறந்திருக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் அறிவித்துள்ளார்.

பெட்ரோல் பங்குகள் காலை 6 மணி முதல் பிற்பகல் 2 30 மணி வரை மட்டுமே செயல்படும். 108 ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கான பெட்ரோல் பங்குகள் அரசு வாகனங்களுக்கு பெட்ரோல் பங்குகள் மட்டும் தொடர்ந்து செயல்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார்.

Categories

Tech |