Categories
உணவு வகைகள் சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சுவையான செட்டிநாடு மட்டன் கோலா உருண்டை!

அசைவ உணவுகளில் உடலுக்கு குளிர்ச்சியைத் தருவது தான் மட்டன். இந்த மட்டன் பலருக்கு மிகவும் விருப்பமான அசைவ உணவு என்பதால் இதனை பல்வேறு ரெசிபிகளாக சமைத்து சாப்பிடலாம். அதில் ஒன்று தான் செட்டிநாடு மட்டன் கோலா உருண்டை. இது மிகவும் சுவையாகவும், அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறும் இருக்கும்.

தேவையான பொருட்கள் :

எலும்பில்லாத மட்டன் – 750 கிராம்
பெரிய வெங்காயம் – 1
துருவிய தேங்காய் – 3/4 கப்
முட்டை – 1 பச்சை
பச்சை மிளகாய் – 7
பொட்டுக்கடலை – 1 டேபிள் ஸ்பூன்
கசகசா – 2 டீஸ்பூன்
சோம்பு – 1 டீஸ்பூன்
பட்டை – 1 இன்ச்
இஞ்சி – சிறிய துண்டு
பூண்டு – 10 பற்கள்
மஞ்சள் தூள் – தேவையான அளவு
எண்ணெய், உப்பு – தேவையான அளவு

செய்முறை :

முதலில் மிக்ஸியில் தேங்காய், பொட்டுக்கடலை மற்றும் கசகசா சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். மட்டனை வேக வைத்து அரைத்துக் கொள்ளவும். பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி சூடு செய்யவும்.

சோம்பு சேர்த்து பொரிந்தவுடன் வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கி சிவந்தவுடன் இஞ்சி, பூண்டு விழுதை சேர்த்து வதக்கவும்.

சிறிது நேரம் கழித்து தக்காளி சேர்த்து வதக்கியவுடன் மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள், சீரகம், சோம்புத்தூள், உப்பு சேர்த்து கிளறவும். பிறகு அரைத்த கலவை மற்றும் மட்டனையும் சேர்த்து கெட்டியாகும் வரை கிளறவும். பிறகு ஆற வைத்து உருண்டை பிடித்து எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

Categories

Tech |