Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

தனுசு ராசிக்கு.. எதையும் சிந்தித்து செய்யுங்கள்… அனுசரித்து செல்லுங்கள்..!!

தனுசு ராசி அன்பர்களே..! இன்று நீங்கள் எதையும் யோசித்து தான் செயல்பட வேண்டியிருக்கும். விலை உயர்ந்த பொருட்களை கையாளும் பொழுது ரொம்ப கவனம் இருக்கட்டும். மருத்துவ செலவுகள் கொஞ்சம் வரக்கூடும். மறதியால் சில பிரச்சனைகள் ஏற்படும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடும் பொழுது சிந்தித்து தான் செயல்பட வேண்டியிருக்கும். இன்று கூட்டாளிகளை அனுசரித்துச் சென்றால் ஓரளவே அனுகூலமான பலனை பெற முடியும்.

உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத இடமாற்றங்களால் குடும்பத்தை விட்டுப் பிரியக் கூடிய சூழ்நிலையும் இன்று உத்தியோகத்தில் இருந்து நல்ல தகவல்கள் தொலைபேசி மூலம் வரக்கூடும். இன்று தொலைபேசி வழித் தகவல் மகிழ்ச்சி கொடுப்பதாகவும் இருக்கும். வருமானத்தைப் பொறுத்தவரை எந்தவித பிரச்சினையும் இல்லை. தயவுசெய்து உடல் ஆரோக்கியத்தில் ரொம்ப கவனமாக இருங்கள். சரியான நேரத்திற்கு எப்பொழுதுமே உணவை எடுத்துக்கொள்ளுங்கள், சரியான நேரத்திற்கு தயவுசெய்து தூங்கச் செல்லுங்கள். இன்று தனுசு ராசிகாரர்களுக்கு காதல் வயப்பட கூடிய சூழல் இருக்கும்.

அதாவது திருமண முயற்சியில் ஈடுபட்டால் நல்ல வெற்றி வாய்ப்புகளை இன்று நீங்கள் பெறலாம். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது கருநீல நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்வது ரொம்ப நல்லது. கருநீலம் உங்களுக்கு நல்ல அதிர்ஷ்டம் நிறமாகவே அமையும். அதுமட்டுமில்லாமல் சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னம் ஆக கொடுப்பதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். இதனால் வாழ்க்கையில் நீங்கள் நல்ல உயர்ந்த இடத்திற்கு செல்ல முடியும், ஏனென்றால் கர்ம  தோஷங்கள் நீங்கி நாளே நல்ல முன்னேற்றமான பலனை அடையக்கூடும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 5 மற்றும் 6

அதிர்ஷ்டநிறம்: கருநீலம் மற்றும் இளம் பச்சை நிறம்

Categories

Tech |