Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

விருச்சிகம் ராசிக்கு… ரகசியங்களை பாதுகாத்திடுங்கள்…நண்பர்களின் ஆதரவு பெருகும்..!!

விருச்சிகம் ராசி அன்பர்களே..! இன்று வளர்ச்சி கூட இஷ்ட தெய்வத்தை வழிபட வேண்டிய நாளாகவே இருக்கும். உத்தியோக முயற்சியில் வெற்றி கிடைக்கும். பொதுநல ஈடுபாடு அதிகரிக்கும். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். அன்பு நண்பர்களின் ஆதரவு பெருகும், இன்று வாக்கு வன்மையால் காரியங்களில் ஓரளவு அனுகூலம் ஏற்படும். வேளை தவறி மட்டும் உணவுகளை உண்ண வேண்டியிருக்கும் பார்த்துக்கொள்ளுங்கள். வாகனம் வீடு ஆகியவற்றால் செலவு கொஞ்சம் மேற்கு இருக்கும்.

முடிந்தவரை பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது ரொம்ப நல்லது. பிறர் விஷயங்களில் தலையிடாமல் இருப்பது ரொம்ப நல்லது. தயவுசெய்து உங்களுடைய விஷயங்களை யாரிடமும் பகிர்ந்து கொள்ளாதீர்கள். அதாவது ரகசியங்களை பாதுகாத்திடுங்கள். குடும்ப விஷயங்களைப் பற்றி யாரிடமும் எதுவும் சொல்லாதீர்கள், இன்று கணவன் மனைவிக்கு இடையே அன்பு இருக்கும். காதலில் வயப்படக்கூடிய சூழலும் இரு திருமண முயற்சிகள் ஏதேனும் இருப்பின் அதன் ஏற்பாடுகள் செய்வது ரொம்ப நல்லது சிறப்பாகவே முடியும்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஊதா நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், ஊதா நிறம் ஓரளவு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சனிக்கிழமை என்பதால் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னம் ஆக கொடுங்கள் அதை எப்பொழுதுமே நீங்கள் வாரம் வாரம் வழங்கி கொள்ளுங்கள். இதனால் கர்ம தோஷங்கள் நீங்கப் பெற்று செல்வச் செழிப்புடன் வாழலாம்.

அதிர்ஷ்ட திசை: கிழக்கு

அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 3

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு மற்றும் ஊதா நிறம்

Categories

Tech |