துலாம் ராசி அன்பர்களே..! இன்று மதிநுட்பத்துடன் செயல்படுவீர்கள். முயற்சிகளுக்கான நல்ல பலன் அதிகமாக கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் சிறப்பான முன்னேற்றம் இருக்கும். சில முக்கிய பணியையும் நிறைவேற்றுவீர்கள். சமூக அந்தஸ்து உயர்வு காண்பீர்கள். பணம் கொடுக்கல் வாங்கல் ஓரளவே சீராகும். தாயின் தேவை அறிந்து நிறைவேற்றுவீர்கள். இன்று திருமண காரியங்கள் ஓரளவு தடைபட்டு பின்னர் சரியாகும். தெய்வ தரிசனங்களுக்காக காத்துக்கொண்டு இருப்பீர்கள்.
இன்று விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். திருமண முயற்சிகளில் சாதகமான பலன் இன்று கிடைக்கும். பல பெரிய மனிதர்களின் நட்பு கிட்டும். புதிய பொருள் சேர்க்கைகளும் ஆடை ஆபரணம் சேரும். இன்று உங்களுடைய நிதி மேலாண்மை கற்றுக்கொள்வீர்கள். கடன் பிரச்சினைகள் கட்டுக்குள் இருக்கும். இன்று ஆதாயத்திற்காக சில முக்கிய முடிவுகளையும் இன்று நீங்கள் எடுப்பீர்கள். குடும்பத்தாருடன் கலந்து ஆலோசித்து ஒரு நல்ல முடிவையும் இன்று எடுக்கக்கூடும்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்வது ரொம்ப நல்லது. ஆரஞ்சு நிறம் உங்கள் அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சனிக்கிழமை என்பதால் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னம் கொடுங்கள். உங்கள் வாழ்க்கையில் உள்ள தோஷங்கள் நீங்கப் பெற்று ரொம்ப செல்வ செழிப்புடன் வாழலாம்.
அதிஷ்ட திசை: வடக்கு
அதிர்ஷ்ட எண்: 6 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு மற்றும் வெளிர் பச்சை நிறம்