மிதுனம் ராசி அன்பர்களே..! இன்று பிள்ளைகளுடைய தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். ஆடை ஆபரணங்கள் ஓரளவு சேரும். கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். தாயாரின் உடல் நலத்தில் மட்டும் அக்கறை கொள்ளுங்கள். வியாபாரத்தில் புதிய சலுகைகளை அறிவிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நல்ல செய்திகள் வீடு தேடி வரக்கூடும். உங்களுடைய திறமை பளிச்சிடும் நாளாகத்தான் இன்றைய நாள் இருக்கும். இன்று தொழில் வியாபாரத்தில் இருந்த சின்ன சின்ன இடையூறுகள் விலகிச்செல்லும்.
தடைகளை தாண்டி இன்று முன்னேறி செல்வீர்கள். உங்களுடைய சிந்தனை திறனும் இன்று கூடும். எதிர்பார்த்த நிதி உதவிகளும் கிடைக்க கூடும். அரசாங்கத்தின் மூலம் ஆதாயம் எதிர்பார்க்கலாம். எதிர்பார்க்கும் இடமாற்றங்கள் தாமதப்பட்டாலும் கௌரவமான பதவிகளை ஏற்க முடியும். இன்று உயர் அதிகாரிகளின் ஆதரவும் உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பு உங்களுக்கு பரிபூரணமாக இன்று கிடைக்கும். அக்கம்பக்கத்தினர் அன்பு உங்களுக்கு பரிபூரணமாக கிடைக்கும். காதல் வயப்பட கூடிய சூழலும் இருக்கும்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், பச்சை நிறம் அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அது அதுமட்டுமில்லாமல் சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னம் ஆக கொடுங்கள். உங்கள் வாழ்க்கையில் உள்ள கர்ம தோஷங்கள் அனைத்தும் நீங்கப் பெறும்.
அதிர்ஷ்டமான திசை: கிழக்கு
அதிர்ஷ்ட எண்: 5 மற்றும் 6
அதிர்ஷ்ட நிறம்: பச்சை மற்றும் நீல நிறம்