Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மேஷம் ராசிக்கு… ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும்… நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும்..!!

மேஷம் ராசி அன்பர்களே..! இன்று உங்களுடைய செயல்களில் நேர்த்தி பிரதிபலிக்கும். குடும்ப உறுப்பினர்கள் பாராட்டுவார்கள். தொழில் வியாபாரம் வளர்ச்சியில் ஓரளவு முன்னேற்றம் ஏற்படும். தொழில் ரீதியாக சில முக்கிய முடிவுகளை எடுக்கக் கூடும். பிள்ளைகள் விரும்பி கேட்ட பொருட்களை வாங்கிக் கொடுக்கக் கூடும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும்.

ஆன்மிகப் பணிகளில் ஈடுபாடு அதிகரிக்கும். குடும்ப வாழ்வில் சிறுசிறு பிரச்சனைகள் தோன்றினாலும் அனைவரையும் அனுசரித்துச் செல்வது நல்லது. ஒற்றுமைக்கு குறைவிருக்காது. பொருளாதாரத்தைப் பொறுத்த வரை ஓரளவு சிறப்பாக இருக்கும். வரவுக்கு மீறிய செலவுகளை தயவுசெய்து கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள். முயற்சிகளில் சில தடைகளுக்குப் பின் நல்ல முடிவு கிடைக்கும்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லை இன்று சனிக்கிழமை என்பதால் காக்கைக்கு அன்னம் இடுவது வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். எள்  கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னம் ஆக கொடுங்கள்.

அதிர்ஷ்டமான திசை: கிழக்கு

அதிர்ஷ்ட எண்: 6 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் வெள்ளை நிறம்

Categories

Tech |