இந்தநிலையில், கொரோனா வைரசால் பெரும் உயிரிழப்பை சந்திவரும் இத்தாலியில் 101 வயதுடைய முதியவர் ஒருவர் கொரோனா நோய்த்தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். அந்நாட்டின், ரிமினி பகுதியைச் சேர்ந்த இந்த முதியவருக்கு கடந்த வாரம் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அந்த முதியவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
கொரோனாவுக்கு இன்னும் மருந்துகள் கன்டுபிடிக்காதது நமக்கு தெரியும். ஆகையால், மாற்று மருந்துகள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகள் மூலமாக அந்த முதியவருக்கு தொடர்ந்து சிகிச்சையளிக்கப்பட்டது. இது நல்ல பலனை கொடுத்தது. ஆம், ஒரு வாரத்தில் அவரது உடல்நிலை சீரானதையடுத்து அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். அவரது குடும்பத்தினர் அவரை வீட்டிற்கு அழைத்துச் சென்றனர்.
கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கி முதியவர்கள் பலர் உயிரிழந்துள்ள நிலையில், 101 வயதான முதியவர் குணமடைந்திருப்பது மற்றவர்களுக்கு நம்பிக்கையளிக்கிறது.