Categories
அரசியல்

தமிழகத்தில் மேலும் 2 பேருக்கு கொரோனா..!

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 38 லிருந்து 40 ஆக உயர்ந்துள்ளது

இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தமிழகத்திலும் அதன் தாக்கத்தை அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டதில் மதுரையை சேர்ந்தவர் உயிரிழந்துள்ளார். காஞ்சிபுரத்தை சேர்ந்தவர் குணமடைந்து வீடு திரும்பிய உத்தரப்பிரதேசத்தை சேர்ந்தவர் குணமாகி விட்டதாக தமிழக அமைச்சர் தெரிவித்திருந்தார்.

தமிழகத்தில் மேலும் இருவருக்கு கொரோனா தொற்று இருப்பதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சகம் ட்விட்டரில் தெரிவித்துள்ளது. அதில், கும்பகோணத்தை சேர்ந்த 42 வயதானநபர், காட்பாடியை சேர்ந்த 49 வயதான நபருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

வெஸ்ட் இண்டீசிலிருந்து கும்பகோணம் திரும்பிய நபருக்கு தஞ்சை அரசு மருத்துவமனையிலும், பிரிட்டனில் இருந்து திரும்பிய காட்பாடி நபருக்கு வேலூர் தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இருவரது உடல் நிலையும் சீராக இருப்பதாகவும் சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 38 லிருந்து 40 ஆக உயர்ந்துள்ளது

Categories

Tech |