தமிழகத்தில் மேலும் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தமிழகத்திலும் அதன் தாக்கத்தை அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டதில் மதுரையை சேர்ந்தவர் உயிரிழந்துள்ளார். காஞ்சிபுரத்தை சேர்ந்தவர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் உத்தரப்பிரதேசத்தை சேர்ந்தவர் குணமாகி விட்டதாக தமிழக அமைச்சர் தெரிவித்திருந்தார்.
இதுவரை கொரோனா வைரசால் 38 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது மேலும் 2 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை ட்விட்டர் மூலம் தகவல் தெரிவித்துள்ளது. பிரிட்டனில் இருந்து காட்பாடி திரும்பிய 49 வயது நபருக்கும் , மேற்கிந்திய தீவு சென்று கும்பகோணம் திரும்பிய 42 வயது நபருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று தமிழ்நாடு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
#UPDATE: TN has 2 new +ve cases. 42 Y M, Kumbakonam,return from West Indies at #TMCH Thanjavur.49 Y M, from Katpadi, return from UK at #Vellore Pvt Hosp. Both traveled from abroad transit via Middle East. Pts are in isolation & stable.@MoHFW_INDIA @CMOTamilNadu @Vijayabaskarofl
— National Health Mission – Tamil Nadu (@NHM_TN) March 28, 2020
வெஸ்ட் இண்டீஸ் நாட்டில் இருந்து திரும்பிய 42 வயது ஆணுக்கு தஞ்சை அரசு மருத்துமனையில் சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாகவும், பிரிட்டனில் இருந்து திரும்பிய 49 வயது ஆணுக்கு வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாகவும் மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.