Categories
கன்னியாகுமாரி சற்றுமுன் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

BIG BREAKING : குமரி கொரோனா வார்டில் பலி 5ஆக உயர்வு…. !!

கன்னியாகுமரியில் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 3 பேர் இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. 40 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்ட நிலையில் 2 பேர் குணமடைந்துள்ளனர். மதுரையை சேர்ந்தவர் மரணமடைந்துள்ளார். இந்நிலையில் வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்தவர்கள் பலரும் தனிமைப்படுத்தப்பட்டு, கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் கன்னியாகுமரியில் கொரோனா சிகிச்சை வார்டில் அனுமதிக்கப்பட்ட மூன்று பேர் ஒரே நாளில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ஏற்கனவே 3 பேர் இறந்த நிலையில் முட்டத்தை சேர்ந்த 2 வயது ஆண் குழந்தை , திருவட்டார் இளைஞர் பலியாகியுள்ளனர். இன்று இறந்த 3 பேரின் பரிசோதனை அறிக்கை வந்த பிறகே அவர்களுக்கு கொரோனா உள்ளதா ? என தெரியும் என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே இரண்டு பேரின் உடற்கூராய்வில் கொரோனா இல்லை என உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |