Categories
உலக செய்திகள்

கொரோனா வதந்தியால் 300 பேர் மரணம்… கலங்கி நிற்கும் ஈரான்!

ஈரானில் கொரோனா வராமல் தடுக்கும் என்ற வதந்தியை நம்பி எரி சாராயத்தை குடித்த 300 பேர் பலியாகியுள்ளனர்.  

ஈரானில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், இதுவரை 29,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 2,200 பேர் பலியாகியுள்ளனர். மத்திய கிழக்கு நாடுகளில் கொரோனாவால் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளன நாடாக ஈரான் இருக்கிறது. இதனிடையே கொரோனா வைரஸ் பரவும் அச்சத்தின் காரணமாக, போதுமான விழிப்புணர்வு மக்களிடம் இல்லாததாலும், சமூக வலைதளங்களில் பரவி வரும் வதந்திகளை நம்பியதாலும்  ஈரான் மிகப்பெரிய சிக்கலை சந்தித்துள்ளது.

In Iran, false belief a poison fights virus kills hundreds

அதாவது, சமூக வலைத்தளங்களில் மது குடித்தால் கொரோனா நம்மை தாக்காது என்று தகவல்கள் பரவி நிலையில், அதனை நம்பிய ஈரான் மக்கள் ஏராளமானோர் மெத்தனால் கலந்த எரிசாராயத்தை குடித்துள்ளனர். இதில் மிகவும் சோகமான செய்தி என்னவென்றால், 5 வயது குழந்தைக்கும் கூட அவரது பெற்றோர்களே எத்தனால் கலந்த எரிசாராயத்தை கொடுத்ததுதான்.

In Iran, False Belief a Poison Fights Virus Kills Hundreds | Voice ...

இந்த நிலையில் கொரோனா வைரசை தடுக்க எரிசாராயத்தை குடித்ததில் 300 பேர் வரை பலியாகி இருப்பதாக ஈரான் ஊடகங்கள் தகவல் தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது. அத்துடன், மேலும் மது அருந்திய ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். ஈரான் நாட்டில் மது தடை செய்யப்பட்ட ஒன்று என்பதனால் தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் எரிசாராயத்தை அவர்கள் அனைவரும் குடித்திருப்பதாகவும் கூறப்படுகின்றது.

Categories

Tech |