கொரோனா வைரஸ் சீனாவில் தோன்றி உலக நாட்டு மக்களின் உயிர்களை பறித்து அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரஸின் பாதிப்பு இந்தியாவையும் விட்டுவைக்கவில்லை. இந்தியாவில் இதன் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இதனை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அமலில் இருக்கிறது.
இந்த நிலையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு 19 பேர் பலியாகியிருப்பதாகவும், 873பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 149 பேர் கொரோனா வைரசால் பதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.