கர்நாடகா-கேரளா எல்லையை திறக்க கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் பினராயி விஜயன் கடிதம் எழுதியுள்ளார். கர்நாடக காவல்துறையால் மூடப்பட்ட தலசேரி – கூர்க் நெடுஞ்சாலையை திறக்க கோரிக்கை சாலை மூடப்பட்டதால் கேரளாவுக்கு அத்தியாவசிய பொருட்கள் கொண்டு செல்ல முடியவில்லை அத்தியாவசிய பொருட்கள் சீராக வருவதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 898ஆக அதிகரித்துள்ளது. 170க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் நாடு முழுவதும் ஏப்., 21 ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதனால் அனைத்து மாநிலங்களிலும் மற்ற மாநிலத்தவர்கள் வராத வகையில் எல்லைகள் மூடப்பட்டுள்ளது. இந்த நிலையில் தலசேரி – கூர்க் நெடுஞ்சாலையை திறக்க கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் பினராயி விஜயன் கடிதம் எழுதியுள்ளார். கேரளாவில் கொரோனா சிறப்பு சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த 69 வயது மதிக்கத்தக்க முதியவர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.