சீனாவின் வூகான் மாகாணத்தில் இருந்து பரவிய கொரோனா உலக நாடுகளிடையே பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. ஒவ்வொரு நாடுகளிலும் ஏராளமான உயிர்களைப் பலி வாங்கி வரும் இந்த வைரஸிற்கு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6 லட்சத்தை தாண்டியுள்ளது. உலகளவில் 6,00,835 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் 27,417 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற 1,33,426 பேர் குணமடைந்துள்ளனர். உலகளவில் அதிகபட்சமாக அமெரிக்காவில் 1,04,256 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதியாகியுள்ளது குறிப்பிட்டதக்கது. ஒரே வாரத்தில் மூன்று லட்சம் பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 2 நாட்களில் ஒரு லட்சத்திற்கு அதிகமானோருக்கு புதிதாக வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இத்தாலி – 86,498, சீனா – 81,394, ஸ்பெயின் – 65,719, ஜெர்மனி – 53,340, பிரான்ஸ் – 32,964, ஈரான் – 32,332, பிரிட்டன் – 14,543, சுவிஸ் – 12,928 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்ட்டுள்ளனர். இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 898ஆக அதிகரித்துள்ளது. 170க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 40ஆக உயர்ந்துள்ளது.