உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு 6 லட்சத்தை தூண்டியுள்ளது மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் 190க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 6 லட்சத்தைத் தாண்டி இருக்கிறது. ஒரு லட்சம் பேருக்கும் மேற்பட்டோர் அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள் என்பது கவனிக்கத்தக்கதாக பார்க்கப்படுகின்றது. ஒரே வாரத்தில் இரண்டு மடங்காக அதிகரித்துள்ள கொரோனா வைரஸ் பாதிப்பில் இத்தாலி சீனாவைத் தாண்டி இரண்டாவது இடத்திற்கு வந்து இருக்கிறது.
தற்போதைய நிலையில் 600,859 பேர் கொரோனாவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் , 27,417 பேர் உயிரிழந்துள்ளதாகவும் , 133,426 பேர் குணமடைந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இதில் அமெரிக்காவில் 104,256 பேருக்கும் , இத்தாலியில் 86,498 பேருக்கும் , சீனாவில் 81,394 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.