144 தடை உத்தரவால் அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதிலும் அவ்வப்போது தட்டுப்பாடு ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த மாதிரியான சூழ்நிலையில் குழந்தைகளுக்கு எம்மாதிரியான உணவு ஊட்டச்சத்தை அளிக்கும் என்பது பற்றி இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.
தற்போது கொரோனா பாதிப்புக்காக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதால் நாடு முழுவதும் மக்கள் வீட்டிற்குள் முடங்கி கிடக்கின்றனர். இதனால் அத்தியாவசியப் பொருட்கள் கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்படுகின்றது.
குறிப்பாக பால் கிடைப்பதில் பெரும் தட்டுப்பாடு என்பது சென்னை போன்ற பெரிய நகரங்களில் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் பெரும்பாலோனோர் குழந்தைகளுக்கு சரியான கால்சியம் சத்து நிறைந்த பால் கொடுப்பதில்லை. ஆகையால் பால் கிடைக்காத நேரத்தில், கால்சியம் சத்துக்களை கொண்ட உலர் திராட்சை, ஆரஞ்சு , பாதாம் ஆகியவற்றை குழந்தைகளுக்கு வழங்கலாம். புரத சத்திற்கு பீன்ஸ், முட்டை, சுண்டல், பன்னீர், பயிர் உள்ளிட்டவற்றை வழங்கலாம்.