Categories
அழகுக்குறிப்பு லைப் ஸ்டைல்

கழுத்து கருமை மறைய வேண்டுமா? இதோ உங்களுக்கான ஒரு டிப்ஸ்…!!

கழுத்தின் கருமை மறைந்து உங்களையே ஆச்சரியப்பட வைக்கும் ஒரு இயற்கையான டிப்ஸ் இதுவே.

தற்போதுள்ள இளைஞர்களுக்கு கழுத்து கருமை என்பது பொதுவான பிரச்சனையாக மாறி வருகின்றது. அது அவர்களை மிகவும் அசிங்கமாக காட்டுகிறது.முகம் எவ்வளவு அழகாக பளிச்சென்று இருந்தாலும், சிலருக்கு கழுத்து கருப்பாக இருக்கின்றது . அந்நிலையில் அது அவர்களின் முகத்தின் அழகையும் சேர்ந்து கெடுக்கின்றது.

இதை வீட்டிலேயே இயற்கையான முறையில் நாம் எவ்வாறு சரி செய்யலாம் என்பதற்கான ஒரு குறிப்பை பற்றி காண்போம்.

  • முதலில் ஒரு துண்டை தண்ணீரில் முக்கி, அதை வைத்து உங்கள் கழுத்தை நன்றாக துடைத்துக் கொள்ளவும்.
  • பின்னர் ஒரு பாத்திரத்தில் ஒரு கரண்டி அரிசி மாவு, ஒரு கரண்டி பேக்கிங் சோடா அதோடு 2 கரண்டி எலுமிச்சை சாறு சேர்த்து பேஸ்ட் போல் ஆக்கிக் கொள்ளவும்.
  • இதை கழுத்தில் எல்லா பக்கமும் நன்றாக தடவி 10 நிமிடம் மசாஜ் செய்யவும்.
  • பின்பு தண்ணீர் கொண்டு அதை நன்றாக துடைத்து விடவும்.
  • இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் கழுத்தின் கருமை மறைந்துவிடும்.

By inza dev

IF YOU WANT TO KNOW MEANS THEN TRY TO FIND ME AND ASK ME

Categories

Tech |