ரிஷபம் ராசி அன்பர்களே..! இன்று கரைந்த சேமிப்புகளை ஈடுகட்டும் நாளாகவே இருக்கும். எடுக்கும் முயற்சிகளில் ஓரளவு முன்னேற்றம் இருக்கும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். தெய்வீக நம்பிக்கை உங்களுக்கு அதிகரிக்கும். ஆடம்பர பொருட்களை வாங்கி சேர்க்கக் கூடும். எதிர்பார்த்த காரியங்கள் நல்லபடியாக முடிய கடினமாக பணியாற்ற வேண்டி இருக்கும். புதிய ஒப்பந்தங்கள் கிடைப்பதில் கொஞ்சம் தாமதம் ஏற்படும். நல்ல நண்பர்களின் உதவியால் தக்க சமயத்தில் உங்களுக்கு நல்ல உதவிகளும் கிடைக்கப் பெறும்.
உடல் ஆரோக்கியத்தில் சின்னச்சின்ன பாதிப்புகள் அவ்வப்போது வந்து செல்லும். பணவரவுகளில் தடைகள் கொஞ்சம் நிலவுவதால் குடும்ப தேவைகளை பூர்த்தி ஆவதில் கொஞ்சம் சங்கடங்களை சந்திக்க வேண்டி இருக்கும். இன்று ஓரளவு சிக்கல்கள் சரியாகும். கணவன் மனைவிக்கு இடையே அன்பு இருக்கும். இருந்தாலும் பேசும் பொழுது கொஞ்சம் நிதானத்துடன் நடந்து கொள்ளுங்கள். பிள்ளைகளின் மீது அக்கறை கொள்வீர்கள்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் சூரிய பகவான் வழிபாட்டையும் முடிந்தால் சிவபெருமான் வழிபாட்டையும் மேற்கொள்ளுங்கள், மிகவும் சிறப்பாகவே இருக்கும். தோஷங்கள் அனைத்துமே நீங்க பெரும்.
அதிர்ஷ்டமான திசை:-தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2 மற்றும் 3
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு மற்றும் மஞ்சள் நிறம்