Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

சிம்மம் ராசிக்கு… புதிய முயற்சிகள் வெற்றியாகும்.. உடன்பிறப்புகளால் உள்ளம் மகிழ்வீர்கள்..!!

 சிம்மம் ராசி அன்பர்களே..! இன்று கேட்ட இடத்தில் ஓரளவு உதவிகள் வந்து சேரும். தொலைபேசி மூலம் உங்களுக்கு மகிழ்ச்சிகரமான சம்பவங்கள் கிடைக்கக்கூடும். பாராட்டும் புகழும் கூடும். புதிய முயற்சியில் வெற்றி கிடைக்கும். உடன்பிறப்புகளின் வழியில் உள்ளம் மகிழும் செய்தி ஒன்று வந்து சேரும். உடல்நலனில் மட்டும் கொஞ்சம் அக்கறையுடன் இருங்கள், கவனமாக இருங்கள். புத்திரர்களால் மன சஞ்சலங்களும், தேவையற்ற வீண் வாக்குவாதங்கள் வந்து செல்லும், பார்த்துக்கொள்ளுங்கள்.

செலவை தயவுசெய்து கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள். கொடுக்கல் வாங்கலில் சிந்தித்துச் செயல்படுவது ரொம்ப நல்லது. தொழில் வியாபாரம் லாபகரமாக நடக்கும். தொழில் விரிவாக்கம் தொடர்பான திட்டங்கள் செயல் படுத்துவதற்கு முயற்சிகளை மேற்கொள்வீர்கள். இருந்தாலும் கொஞ்சம் பொறுமையாக இருங்கள். புதிய முயற்சிகளை மேற்கொள்ளும் போது கொஞ்சம் கவனமாக இருங்கள்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அதுபோலவே இன்று சூரியபகவான் வழிபாட்டையும், சிவபெருமான் வழிபாட்டையும் மேற்கொள்ளுங்கள். காரியங்கள் அனைத்துமே நல்லபடியாகவே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு

அதிர்ஷ்ட எண்: 1 மற்றும் 3

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு மற்றும் வெள்ளை நிறம்

Categories

Tech |