துலாம் ராசி அன்பர்களே..! இன்றும் முடியாத காரியத்தை முடித்து கொடுக்க கூடிய நாளாகவே இருக்கும். தொழில் உத்தியோக நலன் கருதி பயணமொன்றை மேற்கொள்ளலாமா என்ற சிந்தனை மேலோங்கும். கூட்டு முயற்சியில் ஓரளவு வெற்றி கிடைக்கும். இன்று எடுக்கும் முயற்சிகளில் தடைகளுக்குப் பின் வெற்றி அடைவீர்கள். உடல் ஆரோக்கியத்திலும் அடிக்கடி பாதிப்புகள் உண்டாகி மருத்துவ செலவுகள் கொஞ்சம் இருக்கும், பார்த்துக்கொள்ளுங்கள். குடும்பத்தில் ஏற்படக்கூடிய பிரச்சினைகளால் மனநிம்மதி கொஞ்சம் குறையும்.
ஓரளவே இன்று முன்னேற்றம் காணமுடியும். கணவன் மனைவிக்கு இடையே அவ்வப்போது வாக்குவாதங்கள் வந்து செல்லும். மிக முக்கியமாக இன்று நீங்கள் யாருக்கும் வாக்குறுதிகள் எதுவும் கொடுக்க வேண்டாம். ஜாமீன் கையெழுத்து போடவேண்டாம். முடிந்த அளவு இன்று பொறுமையாக இருந்து இறை வழிபாட்டுடன் இன்றைய நாளை தொடங்குவது ரொம்ப சிறப்பு.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. வெள்ளை நிறம் அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அது போலவே இன்று சூரிய பகவான் வழிபாட்டையும், சிவபெருமான் வழிபாட்டையும் மேற்கொள்வது ரொம்ப நல்லது. இதனால் உங்களுக்கு நல்ல முன்னேற்றமான சூழலே அடையலாம்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு
அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 6
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் நீல நிறம்